ஈரோடு,
ஈரோட்டில் மரவள்ளிக் கிழங்கு அறுவடை துவங்கியுள்ள நிலையில், இந்தாண்டாவது கட்டுப்படியான விலை கிடைக்குமா என விவசாயிகள் எதிர்பார்ப்பில் ஆழ்ந்துள்ளனர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள கடம்பூர், பர்கூர், ஆசனூர் உள்ளிட்ட பகுதிகளில் மரவள்ளிக் கிழங்கு பிரதான பயிராக விளைவிக்கப்பட்டு வருகிறது. மழையை மட்டுமே நம்பிபயிரிடப்படும் இந்த பயிருக்கு ஒவ்வொரு வருடமும் அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை அரசு சார்பில் எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை. இதனை பயன்படுத்திக் கொள்ளும் புரோக்கர்கள் அவர்களே ஒரு விலையை நிர்ணயித்து கொள்முதல் செய்வதால் விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகிறார்கள். குறிப்பாக, கூலி வேலையாட்களை வைத்து அறுவடை செய்ய வேண்டிய நிலையில், கூலிக்கு போகத்தான் விவசாயிக்கு பணம் கிடைக்கும் என்ற நிலை காணப்படுகிறது. இதனால் விவசாயிகள் பயிருக்காக செலவிட்ட தொகையைக்கூட எடுக்க முடியாத
நிலைமை உருவாகியுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், மரவள்ளி கிழங்கு அறுவடை தற்போது துவங்கி உள்ளது. ஆனால்.இதனை மிகக் குறைந்த தொகைக்கு மட்டுமே புரோக்கர்கள் கொள்முதல் செய்கின்றனர். அதாவது டன் ஒன்றுக்கு ரூ.5 ஆயிரம் முதல் ரூ.8 ஆயிரம் வரை தான் எடுக்கிறார்கள். இதனால் பயிருக்காக செலவிட்ட தொகை கூடசில நேரங்களில் கிடைப்பதில்லை. எனவே அரசு சார்பில் விலை நிர்ணயம் செய்து, அரசே கொள்முதல் நிலையங்கள் அமைத்து விவசாயிகளிடமிருந்து நேரடியாக மரவள்ளிக் கிழங்கை பெற்றுக்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.- (ந.நி)

Leave a Reply

You must be logged in to post a comment.