சென்னை
மேலும் ஒரு வழக்கு
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மீது மேலும் ஒரு வழக்குப்
பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது சட்ட விரோத நடவடிக்கை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கின் கீழ் விசாரணை இல்லா மல் ஆறு மாதம் சிறையில் வைக்கலாம். இது, தீவிரவாதிகளுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் சட்டமாகும்.

சென்னை
முனைவர் திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், மனோன்மணீயம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். `மீனாட்சிபுரம் மத மாற்றங்கள் ஓர் ஆய்வு’ என்பதுதான் அவரது ஆய்வின் தலைப்பு.

திருநெல்வேலி
ஆட்சியரின் ஆய்வு
திருநெல்வேலி மாவட்டம் சேரன்மகா தேவி அருகே உள்ள கூனியூர் கிராமம் மற்றும் அதைச் சுற்றிய பகுதிகளில் மாவட்டஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் ஆய்வு மேற்கொண்டார். அப்போது, 105 அடி உயரமுள்ள 30 ஆயிரம் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மீது ஏறி, பொதுமக்களுக்குச் சுகாதாரமான முறையில் குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார்.

இஸ்லாமாபாத்
உதவத் தயார்
பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் தனது டுவிட்டர் பக்கத்தில், `பாகிஸ்தான் மக்களின் சார்பாக கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு பிரார்த்த னை செய்து கொள்கிறேன். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு நாங்கள் தயாராக இருக்கிறோம்’ எனப் பதிவிட்டுள்ளார்.

திருவனந்தபுரம்
பிரபல பாடகர் உதவி
பாடகர் உன்னிமேனன் தன் மகன் அங்கூரின் திருமணத்தை எளிமையாக நடத்த முடிவு செய்துள்ளார். 2,500 பேரை அழைத்து திருச்சூரில் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்ட நிலையில், தற்போது 200 பேரை மட்டும் அழைத்து சென்னை யில் திருமணம் நடத்த முடிவு செய்துள்ளார். இதன்மூலம் மீதமாகும் தொகையைக் கேரள வெள்ளப் பாதிப்புக்கு வழங்க உள்ளார்.

நாமக்கல்                                                                                                                                            தமிழகத்திலிருந்து கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள்
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது: கேரளாவிற்கு மின்சாரத்துறை சார்பிலும் உதவிகள் வழங்கப்படும். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரளாவுக்கு 250 மின்மாற்றிகள் மற்றும் 40 ஆயிரம் மின் அளவீட்டு கருவிகள் வழங்கப்படும் என்று தெரிவித்தார்.

இராமநாதபுரம்:
தமிழக மீனவர்கள் 6 பேர் இலங்கை சிறையில் அடைப்பு                                                                     புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாபட்டினத்தில் இருந்து ஆறு மீனவர்கள் நெடுந்தீவு அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று நடுக்கடலில் ஏற்பட்ட சூறை காற்றில் சிக்கிய படகு இலங்கை பகுதிக்கு சென்று அந்நாட்டின் கடற்படையின் ரோந்து கப்பலில் மோதி கவிழ்ந்தது.உயிருக்கு போராடிய மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் மீட்டு காங்கேசன்துறை காவல்துறையினரிடம் ஒப்படைத்தனர். கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டனர்.அவர்களை ஆகஸ்ட் 29 வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.

Leave a Reply

You must be logged in to post a comment.