சேலம்,
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சியினர், சிஐடியு மற்றும் வாலிபர் சங்கத்தினர் பல்வேறு பகுதிகளில் சேகரித்த வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்களை அனுப்பி வருகின்றனர்.

சேலம் மாநகர கிழக்கு பகுதிக்குட்பட்ட சீலநாயக்கன்பட்டி பாரதி நகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாநகர குழு செயலாளர் பி.ரமணி தலைமையில் நடைபெற்ற நிவாரண நிதி சேகரிப்பு பணியில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் டி.உதயகுமார், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன், ஆர்.வைரமணி மற்றும் சண்முகராஜா உட்பட பலர் பங்கேற்றனர். இதில் 30ஆயிரத்து 61 ரூபாய் வசூலிக்கப்பட்டுள்ளது. மேலும், வாலிபர் சங்க மாநகர கிழக்கு செயலாளர் பெரியசாமி தலைமையில் பழைய பேருந்துநிலையத்தில் நடைபெற்ற நிதி சேகரிப்பு இயக்கத்தில் ரூ.12 ஆயிரத்து 965 வசூலிக்கப்பட்டது. ஒமலூர், தாரமங்கலம் பகுதிகளில் தாலுகா செயலாளர் ஈஸ்வரன் தலைமையில் நடைபெற்ற நிதி சேகரிப்பு இயக்கத்தில் ரூ.11 ஆயிரத்து 500 வசூலிக்கப்பட்டது. மேலும், சிபிஎம் வாழப்பாடி தாலுகா குழு உறுப்பினர் தங்கவேல் தனது குடும்பத்தினர் சார்பில்வெள்ள நிவாரண நிதியாக ரூ.25 ஆயிரத்தை கட்சியின் மாநில செயற்குழு உறுப்பனர் பி.செல்வசிங்கிடம் வழங்கினார். மேட்டூரில் இடைக்கமிட்டி செயலாளர் வசந்தி தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் ரூ.20 ஆயிரத்து 780 வசூலிக்கப்பட்டது.

சங்ககிரி பகுதியில் தாலுகா செயலாளர் தலைமையில் நடைபெற்ற வசூல் இயக்கத்தில் செயற்குழு உறுப்பினர் எ.ராமமூர்த்தி, மாவட்ட குழு உறுப்பினர் என்.ஜெயலட்சுமி உள்ளிட்ட பலர்பங்கேற்றனர். இதில் ரூ.15 ஆயிரம் வசூலிக்கப்பட்டு கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங்கிடம் வழங்கப்பட்டது. இதேபோல் பெத்தநாயக்கன்பாளையம் இடைக்கமிட்டி செயலாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற நிவாரண நிதி சேகரிப்பில் மாதர் சங்க நிர்வாகி டி.பெருமா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இதில் ரூ.10 ஆயிரம் சேகரிக்கப்பட்டது. கல்வராயன் மலை செயலாளர் பொன்னுசாமி தலைமையில் நடைபெற்ற நிவாரண நிதி இயக்கத்தில் ரூ.10 ஆயிரம் சேகரிப்பட்டு கட்சியின் மாவட்ட குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதேபோல், சேலம் வடக்கு கமிட்டி சார்பில் சேகரிக்கப்பட்ட ரூ.ஒரு லட்சத்தை மாநகர வடக்கு செயலாளர் முருகேசன், இடைக்கமிட்டி உறுப்பினர் வெங்கடேஷ் ஆகியோரும், மாநகர மேற்கு கமிட்டி சார்பில் வசூலிக்கப்பட்ட ரூ.70 ஆயிரத்தை மேற்கு செயலாளர் எம்.கனகராஜ் மற்றும் இடைக்கமிட்டி உறுப்பினர்கள் மாநில செயற்குழு உறுப்பினர் பி.செல்வசிங் மற்றும் மாவட்ட செயலாளர் பி.ராம மூர்த்தியிடம் வழங்கினர். மேலும்,சிபிஎம் மாநகர மேற்குகுழு சார்பில் வெள்ள நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்நிகழ்வில் மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.முருகேசன், மாநகர செயலாளர் எம்.கனகராஜ், மாவட்ட குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இதேபோல், அயோத்தியாப்பட்டிணம், ஆத்தூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து வெள்ள நிவாரண உதவி பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சிஐடியு சேலம் மாவட்டக்குழுவின் சார்பில் ரூ.5 லட்சம் மதிப்பிலான கேரள வெள்ள நிவாரண பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனை வழியனுப்பும் நிகழ்ச்சியில் சங்கத்தின் மாவட்ட தலைவர் பி.பன்னீர் செல்வம், மாவட்ட செயலாளர் டி.உதயகுமார், மாவட்ட பொருளாளர் வி.இளங்கோ, நிர்வாகிகள் எ.கோவிந்தன் உள்ளிட்ட முன்னணி ஊழியர்கள் பங்கேற்றனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.