சென்னை,
சென்னை காப்பகத்தில் சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை, திருமுல்லைவாயல் பகுதியில் இயங்கி வரும் நித்ய வாசல் காப்பகத்தைச் சேர்ந்த சிறுவர், சிறுமிகள் அங்குள்ள அரசுப் பள்ளி ஒன்றில் படித்து வருகின்றனர். இந்நிலையில், அவர்கள் பள்ளியில் அம்பத்தூர் மாஜிஸ்திரேட் அனிதா தலைமையில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடந்தது.
அப்போது காப்பக நிர்வாகிகள் தங்களுக்கு பாலியில் தொல்லைக் கொடுத்ததாக மாணவிகள் அளித்தனர். இதனால் அதிர்ச்சியடைந்த, மாவட்ட குழந்தைகள் காப்பக அலுவலர் செந்தில், அந்தக் காப்பகத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வில், காப்பகத்தின் காப்பாளர்களாக இருக்கும் பாஸ்கர், சாமுவேல் மற்றும் முத்து ஆகியோர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லைக் கொடுத்தது உறுதியானது காப்பகத்தின் உரிமையாளர் விமலா ஜேக்கப், உதவியாளர் நிர்மலா, பாஸ்கர் மற்றும் முத்து ஆகிய நான்கு பேரைக் காவல்துறை கைது செய்துள்ளனர். அவர்கள் மீது போஸ்கோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்த உள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: