கோட்சே காந்தியை கொன்றிருக்காவிட்டால் நானே காந்தியை கொன்று இருப்பேன் என இந்து மகாசபையின் முக்கிய பொறுப்பில் இருக்கும் பெண் சாமியர் ஒருவர் பேசியிருக்கிறார்.
உத்தரபிரதேசம் மாநிலம் மீரட்டில் அகில பாரத இந்து மகாசபா சார்பில் இந்து நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது. இதன் நீதிபதியாக பெண் சாமியார் பூஜா சாகுன் பாண்டே நியமிக்கப்பட்டுள்ளார். இந்த ஏற்பாடு சங்பரிவார் அமைப்புகள் தொடர்ந்து கூறி வரும் அகண்ட பாரதத்தின் ஒரு பகுதியாகும். இந்த நீதிமன்றம் அதிகாரப்பூர்வமற்றது ஆகும். ஆதிகாரபூர்வமற்ற நீதிமன்றத்தின் நீதிபதியாக பொறுப்பேற்றிருக்கும் புஜாசாகுன் பாண்டே., ”மகாத்மா காந்தியை கோட்சே கொல்லவில்லை என்றால் அதை நான் செய்திருப்பேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டை துண்டாடுவதில் நம்பிக்கை கொண்ட காந்தியை கொன்றது ஒன்றும் தவறல்ல. அகில பாரத இந்து மகாசபா நாதுராம் கோட்சேவை வணங்குகிறது. கோட்சேவை நினைத்து நாம் பெருமை கொள்கிறோம்”என்று கூறியிருக்கிறார்.
2019 நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் வேலையில் எப்படியாவது மீண்டும் பாஜகவை ஆட்சியில் அமர்த்த நாடு முழுவதும் சங்பரிவார் அமைப்பினர் இந்து மதவெறியை கிளப்பி வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இந்த அமைப்பை சேர்ந்த சுவாமி சக்கரபாணி மகராஜ் ,”மாட்டு இறைச்சி சாப்பிடும் கேரள மக்களுக்கு வெள்ள நிவாரண உதவி செய்யக்கூடாது என்று பேசியது குறிப்பிடப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.