திருச்சி, முக்கொம்பில் செய்தியாளர்களிடம் முதல்வர் கூறுகையில், கேரளாவில் ஏற்பட்ட வெள்ளத்திற்கு தமிழக அரசு காரணம் அல்ல. முல்லைப் பெரியாறு அணை பலமாக உள்ளது. 142 அடி வரை தண்ணீர் தேக்கி வைக்கலாம் என நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதற்கு 20 நாட்கள் கழித்துத்தான் கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டது. அங்கு வெள்ளம் ஏற்பட்டு ஒரு வாரத்திற்கு பிறகே முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த அணை திறக்கப்படுவதற்கு முன்பு 3 முறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது. எனவே கேரளாவில் உள்ள அனைத்து அணைகளிலும் உபரி நீர் திறக்கப்பட்டதே வெள்ளப்பெருக்கிற்கு காரணம். முல்லைப் பெரியாறு அணையில் உபரி நீர் திறக்கப்பட்டது காரணம் அல்ல என்று முதல்வர் பதிலளித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.