திருச்சிராப்பள்ளி,
அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி கண்டோன்மெண்ட் கிளை, துறையூர் கிளை மற்றும் ஸ்டேட் வங்கி ஊழியர்கள் சார்பில் ரூ. 3 லட்சம் மதிப்பில் நிவாரணப் பொருட்கள் கேரளாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டது. இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தின் திருச்சி கண்டோன் மெண்ட் கிளை தோழர்கள் கணேஷ்ராம், திருநாவுக்கரசு, பூபாலன், துறையூர் கிளை பழனியாண்டி, ஸ்டேட் வங்கி ஊழியர்கள் கிருஷ்ணமூர்த்தி, ஓம்பிராகாஷ் ஆகியோர் கேரள மாநிலம் பாலக்காடு அருகில் உள்ள சாலக்குடிக்கு கொண்டு சென்று வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்கினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.