சென்னை:
குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து தமிழக உள்துறை
மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க
வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக தொடுக்கப்பட்ட வழக்கில் குழந்தைக் கடத்தலை தடுக்க தனி படையை உருவாக்கவும், அறிக்கை தாக்கல் செய்யவும் தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இதுகுறித்த விசாரணையின் போது அறிக்கை தாக்கல் செய்ய தமிழக அரசுத் தரப்பில் கூடுதல் அவகாசம் கோரப்பட்டது. இதற்கு கண்டனம் தெரிவித்த நீதிபதிகள், பிரச்சனையின் முக்கியத்துவத்தை தமிழக அரசு புரிந்துகொள்ளவில்லை. நீதிமன்றம்அழுத்தம் கொடுத்துத்தான் அரசு நடவடிக்கை எடுக்க வே ண்டியதில்லை. அரசே தாமாக முன்வந்து நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்.

நாட்டின் எதிர்காலமான குழந்தைகள் கடத்தப்படுவதை பாதுகாக்க அரசு தவறிவிட்டதாக நீதிபதிகள் கூறினர். அப்போது தமிழக குழந்தைகள் குஜராத் மாநிலத்திற்கு கடத்தப்பட்டிருப்பதாக மனு தாரர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.குழந்தைகள் விமானம் மூலம் வெளிநாடுகளுக்கு கொண்டு செல்லப்படும் நோக்கம் குறித்து அரசுக்கு கேள்வி எழுப்பிய நீதிபதிகள், காவல் துறையினர் மற்றும் நீதிபதிகளின் குழந்தைகள் பாதுகாப்பாக இருந்தால் மட்டும் போதாது. கடைசி குடிமகனின் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தனர். மேலும் குழந்தைகள் கடத்தலை தடுக்க எடுத்த நடவடிக்கை குறித்து உள்துறை செயலாளர் மற்றும் சமூக நலத்துறை முதன்மை செயலாளர் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.