உலகில் விற்பனையாகி வரும் மருந்துகளில் 10 சதவிகிதம் மருந்துகள் போலியானவையாக இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
சர்வதேச சுகாதார மையம் உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்தின் தரத்தினை ஆய்விற்கு உட்படுத்தியது. இந்த ஆய்வில் உலகம் முழுவதும் விற்பனையாகும் மருந்துகளில் 10 சதவிகிதம் போலியானவை என தெரிய வந்துள்ளது. சந்தையில் முறையாக உரிமம் பெறப்படாமல் சில மருந்துகள் விற்கப்படுவதாகவும் சுகாதார நிறுவனம் உறுதி செய்திருக்கிறது. குறிப்பாக ஆண்டி பயாடிக் எனப்படும் நோய் எதிர்ப்பு மருந்துகள் மற்றும் விட்டமின் மருந்துகளில் அதிகளவில் போலியானவை இருபப்தாக ஆய்வு முடிவில் தெரிய வந்திருக்கிறது.
எனவே இவை ஆபத்தை உருவாக்க கூடியவை. மருந்தகங்களிலும், மருத்துவமனைகளிலும் பெறப்படும் மருந்துகளின் தரம் குறித்து மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருக்கிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.