ஈரோடு,
ஈரோட்டில் வியாழனன்று நடைபெற்ற மாட்டுச் சந்தையில் பசு, எருமை கறவை மாடுகள், வளர்ப்புக்கன்றுக்குட்டிகள் ஆகியவை ரூ.2 கோடிக்கு விற்பனையாகின.

ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் காவிரிக் கரை சோதனைச்சாவடி அருகே வாரந்தோறும் புதன், வியாழன் ஆகிய இரு நாட்களில் மாட்டுச் சந்தை நடைபெறுகிறது. இந்நிலையில் வியாழனன்று நடைபெற்ற சந்தையில் சுமார் ரூ.2 கோடிக்கு வணிகம் நடைபெற்றது. இதுகுறித்து மாட்டுச்சந்தை மேலாளர் ஆர்.முருகன் கூறுகையில், இந்த வாரச்சந்தையில் 300 பசு மாடுகள், 300 எருமைகள், 200 வளர்ப்புக் கன்றுகள் விற்பனை செய்யப்பட்டன. இதில், பசுமாடு ரூ.16 ஆயிரம் முதல் ரூ.32 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.18 ஆயிரம் முதல் ரூ.33 ஆயிரம் வரையிலும், வளர்ப்பு கன்றுகள் ரூ.1000 முதல் ரூ.8 ஆயிரம் வரையிலும் விற்பனை ஆகியுள்ளது. மொத்தத்தில் சுமார் ரூ.2 கோடிக்கு வணிகம் நடைபெற்றுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Leave a Reply

You must be logged in to post a comment.