சிம்லா,
இமாச்சல் பிரதேசத்தில் மலைப்பாதையில் பள்ளத்தில் கார் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 11 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இமாச்சலபிரதேசத்தின் குல்லு மாவட்டத்திற்கு அருகேயுள்ள ராஹ்னி நுல்லாஹ் மலைப்பாதையில் 200 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்த விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 11 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் விபத்துக்கான காரணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
குல்லு மாவட்ட போலீஸ் கண்காணிப்பாளர் ஷாலினி அஹ்னிஹோத்ரி கூறுகையில், 5 பெண்கள், 3 ஆண்கள் மற்றும் 3 குழந்தைகள் என 11 பேர் இந்த கோர விபத்தில் உயிரிழந்துள்ளனர். சம்பா மாவட்டத்தின் பாங்கி பகுதியைச் சேர்ந்த இவர்கள், மணாலியிருந்து பாங்கி செல்லும் வழியில் விபத்துக்குள்ளாகினர் எனக் கூறினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.