கான்பெரா: 
ஆஸ்திரேலியாவின் ஆளும் கட்சியான கன்சர்வேட்டிவ் கட்சிக்குள் தலைவர்களிடையே நடந்த தலைமைக்கான போட்டியில் தோல்வியுற்ற ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டர்ன்புல் வலுக்கட்டாயமாக பதவியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார். அதையடுத்து அடுத்த பிரதமராக ஸ்காட் மோரிசன் பதவியேற்கவுள்ளார்.

கன்சர்வேட்டிவ் கட்சியின் பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் வாக்கெடுப்பை நடத்தக்கோரி அளித்த கடிதத்தை தொடர்ந்து வாக்கெடுப்பை நடத்துவதற்கு மால்கம் ஒப்புக்கொண்டார்.கன்சர்வேட்டிவ் கட்சியின் பொருளாளரான மோரிசனுக்கும், அந்நாட்டின் முன்னாள் உள்துறை அமைச்சரான பீட்டர் டுட்டனுக்கும் இடையே நிலவிய கடும் போட்டியில் மோரிசன் 45-40 வாக்குகள் கணக்கில் வெற்றிபெற்றார்.

மால்கம் டர்ன்புல்

மால்கம் டர்ன்புல் புதிய தலைமையை தேர்ந்தெடுக்கும் இந்த தேர்தலில் போட்டியிடவில்லை.
கடந்த 10 ஆண்டு காலத்தில் கட்சிக்குள் நிலவிய பிரச்சனையால் பதவியிலிருந்து விலக்கப்படும் நான்காவது ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் என்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய ஆண்டுகளில் ஒரு ஆஸ்திரேலிய பிரதமர் கூடமுழு மூன்றாண்டுகாலம் பதவியில் நீடிக்கவில்லை.

அடிப்படையில் பழமைவாத கொள்கைகளுக்கு ஆதரவளிக்கும் ஸ்காட் மோரிசன், டோனி அபாட்டின் ஆட்சிக்காலத்தில் குடியேற்ற அமைச்சராக பதவியேற்றவுடன், தேசிய அளவில் முக்கியத்துவம் பெற்றார்.அகதிகள் “படகுகளை நிறுத்துங்கள்” என்னும் ஆஸ்திரேலியாவின் கடும்போக்கு கொள்கையை செயல்படுத்திவர்.

பீட்டர் டுட்டன்

இவரது சர்ச்சைக்குரிய தஞ்சம் கோருவோர் கொள்கைகள், கடல் மார்க்கமாக வரும் அகதிகள் தடுப்பு மையங்கள் குறித்த நடவடிக்கைகள் விமர்சனங்களை உண்டாக்கின.இந்த ஆஸ்திரேலியாவில் கடந்தாண்டு கொண்டுவரப்பட்ட ஒரே பாலினத்தவர்களின் திருமணம் குறித்த மசோதாவை எதிர்த்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

%d bloggers like this: