சென்னை;
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்து விசாரணை நடத்தி வரும் ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தில் எய்ம்ஸ் மருத்துவர்கள் வெள்ளியன்று ஆஜராகினர். அவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் குறுக்கு விசாரணை நடத்தினார்.

ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த போது, தில்லியில் இருந்து எய்ம்ஸ் மருத்துவக் குழுவினர் வந்து ஆலோசனைகளை வழங்கினர். இதன் அடிப்படையில் எய்ம்ஸ் மருத்துவக் குழுவிற்கு ஆறுமுகசாமி ஆணையம் சம்மன் அனுப்பியிருந்தது. எய்ம்ஸ் இதய நோய் சிகிச்சை நிபுணர் நிதிஷ் நாயக், நுரையீரல் நிபுணர் ஜி.சி.கில்னானி, மயக்கவியல் துறை நிபுணர் அஞ்சன் டிரிகா ஆகிய மூவரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். ஆறுமுகசாமி அவர்களிடம் விசாரணை நடத்தினார். இந்நிலையில், ஆறுமுகசாமி ஆணையத்தில் வெள்ளியன்று மீண்டும் ஆஜராகியுள்ள அந்த மருத்துவர்கள் மூவரிடமும் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.

Leave A Reply

%d bloggers like this: