ஜகர்தா :

டென்னிஸ் போட்டியின் ஆடவர் இரட்டையர் போட்டியில் இந்திய வீரர்களான ரோகன் போபண்ணா மற்றும் டிவிஜ் சரண் ஆகியோர் 6-3, 6-4 என்ற நேர்செட் கணக்கில் கசகஸ்தான் வீரர்களான அலெக்ஸாண்டர் புப்ளிக் மற்றும் யெவ்செயெவ் ஆகியோரை வீழ்த்தி தங்க பதக்கத்தை வென்றனர். இதற்கு இந்திய குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் வாழ்த்து தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். வீரர்களை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இன்று நடைபெற்ற படகோட்டும் போட்டியின் ஆண்கள் குழுப்பிரிவில் சுவரன்சிங், தத்துபொக்கானல், ஓம்பிரகாஷ் மற்றும் சுக்மீத்சிங் ஆகியோர் அடங்கிய அணி தங்கபதக்கத்தை வென்றுள்ளது. இன்று நடைபெற்ற 10மீட்டர் ஏர் பிஸ்டல் துப்பாக்கி சுடும் போட்டியில் இந்தியாவின் துப்பாக்கி சுடும் வீராங்கனை ஹீனா சிந்து வெண்கல பதக்கத்தை வென்றார்.

இந்தோனேசியாவின் ஜகர்தா மற்றும் பாலெம்பங் நகரில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டுப் போட்டியின் 6வது நாளான இன்று இந்தியா தற்போதுவரை 6 தங்கம், 4 வெள்ளி, 14 வெண்கல பதக்கங்களுடன் 7வது இடத்தில் உள்ளது.

Leave A Reply

%d bloggers like this: