முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மரணத்தை நரேந்திர மோடி மற்றும் அமித்ஷா உள்ளிட்ட பாஜகவிர் அரசியல் லாபத்திற்காக பயன்படுத்துகின்றனர் என வாஜ்பாயின் மருமகள் குற்றம்சாட்டியுள்ளார். அவரின் பெயரை தவறாக பயன்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்தியாவின் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் கடந்த 16ம் தேதி மரணமடைந்தார். அவரின் இறுதி ஊர்வலத்தின் போது அமித் ஷா மற்றும் மோடி 4 கிலோ மீட்டர் தூரம் நடந்தே சென்றனர். இது 2019 நாடாளுமன்ற தேர்தலுக்கான நடைபயணமாகவே இருந்தது. மேலும் வாஜ்பாயின் அஸ்தியை இந்தியா முழுவதும் கொண்டு சென்று சடங்கு சம்பரதாயங்கள் செய்ய பாஜகவினருக்கு உத்தரவிடப்பட்டிருக்கிறது. இது பாஜகவினர் அரசியல் லாபத்திற்காக செய்யும் அரசியல் ஆகும். இது வாஜ்பாயின் மரணத்தை தவறாக பயன்படுத்துவதாகும். அவருக்காக 5 கிலோ மீட்டர் நடந்தவர்கள் அவரின் கொள்கைகளுக்காக 2 அடிகள் எடுத்து வைத்தால் நன்றாக இருக்கும் எனவும் கருணா சுக்லா கூறியுள்ளார்.
மேலும் அனைவரது உண்மை முகத்தை அறிந்து கொண்டுள்ள மக்கள் நடக்க இருக்கும் தேர்தலில் அதற்கு தகுந்த பதிலளிப்பார்கள் . வாஜ்பாயின் பெயர் பல திட்டங்களுக்கு தற்போது சூட்டப்படுகிறது. அவர் உயிரோடு இருக்கும் போதே ஏன் அவரது பெயரை சூட்டவில்லை எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: