சென்னை:
ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு தலைவராக ஓய்வு
பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீப்தரை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் நியமித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூடும் தமிழக அரசின் உத்தரவுக்கு
எதிராக வேதாந்தா குழுமத்தின் சார்பாக தாக்கல் செய்த மனுக்களை தேசிய பசுமைத் தீர்ப்பாயம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில், ஸ்டெர்லைட் ஆலை குறித்த அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்படும் என தேசிய பசுமைத் தீர்ப்பாயம் கடந்த ஆக. 20 ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.இந்தக் குழுவில் மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரித்தின் உறுப்பினர் ஒருவரும், மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில் ஒருவரும் இடம் பெறுவார்கள் எனவும், இந்தக் குழு சுய அதிகாரம் பெற்ற குழுவாக இயங்கும் எனவும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் தெரிவித்திருந்தது. இந் நிலையில், ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்யும் குழுவுக்கு, பஞ்சாப், ஹரியானா உயர்நீதிமன்றங்களில் பணியாற்றி ஓய்வு பெற்ற நீதிபதி எஸ்.ஜே. வசீப்தரை தலைவராக நியமித்து தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.