நாகப்பட்டினம்;
கேரள மக்களுக்காக ரூ.4.50 லட்சம் மதிப்பிலான 16 டன் எடை கொண்ட 640 அரிசி மூட்டைகள், ரூ.50,000 மதிப்பிலான புதிய துணிமணிகள், சேலை, வேட்டி, உள்ளாடை, நைட்டி, போர்வை மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட பாதுகாக்கப்பட்ட உணவுப் பொருள்கள் லாரி மூலம் வியாழக்கிழமை மாலை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாகை மாவட்டக் குழு அலுவலகம் முன்பிருந்து கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

நாகப்பட்டினம் மாவட்டம் முழுவதும் கட்சியின் ஒன்றியக் குழுக்கள், கிளைத் தோழர்கள் மொதுமக்களிடம், வீடு வீடாகச் சென்று அரிசி உள்ளிட்ட பொருள்கள், நிதி என வசூல் செய்ததின் மதிப்பு ரூ.5 லட்சமாகும். இந்த நிவாரணப் பொருள்கள் ஏற்றிய வாகனத்தை, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன் செங்கொடியசைத்து துவக்கி வைத்தார்.

நிவாரணப் பொருள்களை கட்சியின் மாவட்டச் செயலாளரும், சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான நாகைமாலி, மாநிலக்குழு உறுப்பினரும், சட்டமன்ற உறுப்பினருமான வி.மாரிமுத்து, மாநிலக்குழு உறுப்பினர் ஏ.வி.முருகையன் தலைமையில் மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், மாவட்டக்குழு உறுப்பினர்கள், ஒன்றியச் செயலாளர்கள், கிளைச் செயலாளர்கள், தோழமைச் சங்க நிர்வாகிகள் நிவாரணப் பொருள்கள் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர்கள் பி.கே.ராஜேந்திரன், பி.டி.பகு மற்றும் தோழமைச் சங்க நிர்வாகிகள் என்.வடிவேல், கே.மாரிமுத்து, பி.எம்.நன்மாறன், ஏ.இளங்கோவன், கே.கருணாநிதி, கே.சித்திரவேலு, ஜி.சிவாஜி, ஜி.ஜோதிபாசு ஆகிய தோழர்கள் சுமை தூக்கும் தொழிலாளர்களாக மாறி நிவாரணப் பொருள்களை லாரியில் ஏற்றினர். நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட வாகனத்தோடு நகரச் செயலாளர் எம்.பெரியசாமி, சி.ஐ.டி.யு. மாவட்டத் தலைவர் பி.ஜீவா ஆகியோர் உடன் சென்றனர்.

நிவாரணப் பொருள்கள் ஏற்றப்பட்ட வாகனம் புறப்படும் போது, ஜி.ராமகிருஷ்ணன், நாகைமாலி, வி.மாரிமுத்து, ஏ.வி.முருகையன், ஜி.வெங்கடேசன் மற்றும் பலர் வழியனுப்பி வைத்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.