திருவனந்தபுரம்
மாட்டுக் கறி உண்பவர்களுக்கு வெள்ள நிவாரண உதவிகள் வழங்கக்கூடாது என இந்து மகாசபையின் தலைவர் கூறி உள்ளார்.
கேரளாவில் மழை குறைந்துள்ளனதைத் தொடர்ந்து புனரமைப்பு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. கேரளா வெள்ள நிவாரணத்திற்கு பல்வேறு இந்திய மாநிலங்கள் மற்றும் உலகின் பல பகுதிகளில் இருந்து மக்கள் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். இந்நிலையில் சங்பரிவார் அமைப்புகளில் ஒன்றான இந்து மகாசபை என்னும் அமைப்பின் தலைவர் சக்ரபாணி மஹாராஜ் சர்ச்சைக்குரிய கருத்தை வெளியிட்டுள்ளார்.
அவர், “முதலில் கேரள மக்கள் மாட்டுக்கறி உண்கிறார்களா என்பதை கேட்டறிய வேண்டும்.   பசு மாடு என்பது அன்னை ஆகும்.   அந்த கோமாதாவை உண்பது பாபம் .   அவ்வாறு பாபம் செய்பவர்களுக்கு உதவுவது அதைவிட பாவம் ஆகும்.   அதனால் கேரள மக்களுக்கு உதவுவது தவறாகும்” என தெரிவித்துள்ளார்.
சாமியார் சங்கரபாணி மஹாராஜ் கருந்து கேரள மக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply

You must be logged in to post a comment.