மதுரை;
கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பாளர் முகிலனை மதுரை மத்தியச் சிறையில் கழிப்பறை அருகே பயன்பாடற்ற தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

இதுதொடர்பாக மதுரை மாவட்ட குற்றவியல் நீதிபதி மதுரை மத்திய சிறையில் ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்ய கோரிய வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணையின் அடிப்படையில் உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் ஆகியோர் மதுரை மத்தியச் சிறைக்கு நேரில் சென்று வியாழன் அன்று ஆய்வு செய்தனர்.

முன்னதாக இந்த மனு வியாழன் அன்று நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், சதீஷ்குமார் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, மதுரை மத்திய சிறையில் முகிலன் அடைக்கப்பட்ட. அறை மற்றும் வசதி குறித்து தாங்களே நேரில் வந்து ஆய்வு செய்கிறோம் என கூறி வழக்கு விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டிருந்தனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.