உடுமலை,
உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் பல்கலைக்கழக இறுதித் தேர்வுகளில் தங்கம் மற்றும் வெள்ளிப்பதக்கங்களை பெற்றுள்ளனர்.

பாரதியார் பல்கலைக்கழகத்தின் ஏப்ரல் 2018 இல் நடைபெற்ற இறுதித் தேர்வுகளில் உடுமலை அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் நான்கு தங்கப்பதக்கங்கள், இரண்டு வெள்ளிப்பதக்கங்கள் உட்பட பதின்மூன்று சிறப்பிடங்களைப் பெற்றுள்ளனர். இளநிலைப் பட்ட வகுப்புகளில் புள்ளியியல் பாடப்பிரிவில் ஜே.ஜான்சிராணி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். இதே துறையில் கே. மோகனபிரியா மூன்றாமிடத்தைப் பெற்றுள்ளார். மேலும்,  வணிகவியல்-மின்வணிகம் (B.com (ecom)) பாடப்பிரிவில் வி.கௌரி முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கத்தையும், பி.புனிதா மூன்றாமிடத்தையும், எஸ்.காயத்ரி நான்காமிடத்தையும், என்.முரளி ஐந்தாம் இடத்தையும் பெற்றுள்ளனர். மேலும், முதுநிலைப் பாடப்பிரிவுகளில் சுற்றுலாவியல் பாடத்தில் எம். திருச்செல்வம் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கத்தையும், எம். சரண்யா இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும் வென்றுள்ளனர்.

இதேபோல், புள்ளியியல் பாடப்பிரிவில் ஆர்.கௌசல்யா முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கம் வென்றுள்ளார். வேதியியல் துறையில் டி.யமுனா தனலட்சுமி இரண்டாமிடம் பெற்று வெள்ளிப்பதக்கத்தையும், ஆர். முத்துசெல்வி ஐந்தாம் இடத்தையும் வென்றுள்ளார். இயற்பியல் பாடத்தில் டி.மேகலாபிரியா மூன்றாம் இடத்தினைப் பெற்றுள்ளார். இதனால் பாரதியார் பல்கலைக்கழக அளவில் பதின்மூன்று இடங்களைப் பெற்ற மாணவ-மாணவியரைக் கல்லூரி முதல்வர் கு.பாலகிருஷ்ணன் மற்றும் துறைத் தலைவர்கள் வாழ்த்திப் பாராட்டு தெரிவித்தனர்.

Leave A Reply

%d bloggers like this: