திருவனந்தபுரம்                                                                                                                                                    நெகிழ வைக்கும் மனிதர்
கேரளா, செங்கன்னூர் மாவட்டம் அரட்டுப்புழா ஊரைச் சேர்ந்த மாற்றுத்திறனாளியான சின்னதுரை, வெள்ளத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய பெண் ஒருவரைக் காப்பாற்றியுள்ளார். இவர், வாழைமரம் மற்றும் மரப்பட்டையால் அமைக்கப்பட்ட தற்காலிக படகு போல் ஒன்றைச் செய்து அப்பெண்ணைக் காப்பாற்றியுள்ளார்.

புதுதில்லி
மீண்டும் பொறுப்பேற்பு
உடல்நலம் பாதிக்கப்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த அருண் ஜெட்லி வியாழக்கிழமை மத்திய நிதித்துறை அமைச்சராக மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற பின்பு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முன்னதாக அவர் உடல்நலம் குன்றியிருந்தபோது நிதி யமைச்சர் பொறுப்பை ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கவனித்து வந்தார்.

சென்னை
மக்களை பாதிக்கும்!
கடந்த ஏப்ரலில் தமிழகத்தில் உள்ள சுங்கச்சாவடிகளில் 20 சதவீதம் கட்டண உயர்வு அறிவிக்கப்பட்ட நிலையில், மீண்டும் 10-15 சதவீதம் வரை கட்ட ணத்தை உயர்த்த தேசிய நெடுஞ்சாலை துறை முடிவு செய்திருப்பது கண்டனத் திற்குரியது. மக்களை வெகுவாக பாதிக்கும் இந்த கட்டண உயர்வை உடனடி யாக கைவிட வேண்டும் என மு.க.ஸ்டாலின் வலி யுறுத்தி உள்ளார்.

திருச்சூர்
பக்ரீத் : மனிதநேயம்
கேரளாவின் திருச்சூர் மாவட்டத்தில் உள்ள எரவத் தூர் என்ற கிராமத்தில் உள்ள மசூதியில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அப்பகுதி இஸ்லாமியர்கள் அங்குள்ள கோயில் வளாகத்தில் தொழுகை நடத்தினர். இதற்கு கோயில் நிர்வாகிகள் இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளித்துள்ளனர். பின்னர், சுமார் 200 இஸ்லாமியர்கள் கோயில் வளாகத்தில் தொழுகை நடத்தினர்.

திருவனந்தபுரம்
கவுரவிக்கும் கேரளா
தேசிய பேரிடர் மீட்புக் குழுவினர், கடலோரக் காவல் படையினர், துணை ராணுவப் படையினர் போன்ற வீரர்கள் கேரள வெள்ளத்தின்போது சூப்பர் ஹீரோக்கள் போன்று செயல்பட்டு பல லட்சக்கணக்கான மக்களைக் காப்பாற்றியுள்ளனர். இவர் களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும் கவுரவிக்கும் வகையிலும் ஆகஸ்ட் 26 ஆம் தேதி கேரள அரசால் ஒரு நிகழ்ச்சி நடத்தப்பட உள்ளது.

உலகம்

சந்தையை கைப்பற்ற களமிறங்கும் ஜியோமி
ஜியோமி மொபைல் பொகொ எஃப் 1 எனும் அதிக வசதிகள் கொண்ட ஒரு புதிய மொபைலை அறிமுகப்படுத்திஉள்ளது. சாம்சங் கேலக்ஸி நோட் 9 இல் உள்ள வசதிகள் அனைத்தும் இந்த ஜியோமி மொபைலிலும் உள்ளது. ஆனால், இதன் விலை அதனுடன் ஒப்பிடுகையில் மிகவும் குறைவு.ஜியோமி முன்பே இந்திய சந்தையில் வலுவாக கால் ஊன்றிவிட்ட நிலையில், பிற சந்தைகளை பிடிக்கும் முயற்சியிலும் இறங்கி உள்ளது. இதன் பேட்டரி -3,800 எம்ஏஎச் மற்றும் ரேம் 8 ஜிபி. இரண்டு மாடல்களில் வெளியிடப்பட்டிருக்கும் இந்த மொபைலின் பேஸிக் மாடலின் விலை 20,999 மற்றும் டாப் எண்ட் வெர்சனின் விலை 29,999.

ஆஸ்திரேலியாவின் வறட்சி
ஆஸ்திரேலியாவில் சமீப காலங்களில் எப்போதும் இல்லாத அளவுக்கு மோசமான வறட்சி நிலவி வருகிறது. வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஜூன் மாதம் பார்வையிட்ட ஆஸ்திரேலியா பிரதமர் மால்கம்,பருவநிலை மாற்றத்திற்கும் இப்போது ஆஸ்திரேலியா எதிர்கொண்டு வரும் வறட்சிக்கும் நேரடி தொடர்பு உள்ளது என்றார்.ஆஸ்திரேலியாவில் பக்ரீத் பண்டிகையை கொண்டாடிய இஸ்லாமியர்கள் தொழுகையின் போது மழை வேண்டி பிரார்த்தனை செய்தார்கள். சிட்டினியில் கூடிய 30 ஆயிரம் ஆஸ்திரேலிய முஸ்லிம்கள் இந்த மோசமான வறட்சி முடிவுக்கு வர வேண்டுமென கூட்டு தொழுகையை மேற்கொண்டார்கள்.

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் இஸ்ரேல் தொடர் அத்துமீறல்
யூத குடியேற்றங்களுக்காக ஆக்கிரமிக்கப்பட்ட மேற்கு கரையில் ஆயிரம் புதிய வீடுகளை கட்ட இஸ்ரேல் திட்டமிட்டுள்ளது. 382 புதிய வீடுகள் கட்ட இறுதி ஒப்புதல் வழங்கப்பட்டு விட்டது. மீதமுள்ள வீடுகள் கட்டுவதற்கான செயல்திட்டம் தொடக்க நிலையில் உள்ளது. சர்வதேச சட்டத்தின்படி இந்த குடியேற்றங்கள் சட்டத்திற்கு புறம்பானது. ஆனால், இஸ்ரேல் இதனை ஒப்புக்கொள்ள மறுக்கிறது. பாலஸ்தீனியர்கள் தங்களுக்கு சொந்தமான நிலம் என்று சொல்லும் மேற்கு கரை மற்றும் கிழக்கு ஜெருசலேம் பகுதிகளில் இஸ்ரேல் 1967 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்பட்ட 140 குடியேற்றங்களில் 60,000 யூதர்கள் வசிக்கிறார்கள்.

Leave a Reply

You must be logged in to post a comment.