திருப்பூர்,
திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்பட்ட பயிற்சியில் பங்கேற்ற 35 பேர் தமிழ்நாடு அரசுத் தேர்வாணையத்தின் குரூப் 4 தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.

திருப்பூர் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் செயல்பட்டு வரும் தன்னார்வ பயிலும் வட்டத்தின் மூலம் பயிற்சி பெற்ற 35 பேர் அண்மையில் வெளியிடப்பட்ட தமிழ்நாடு அரசுத் தேர்வாணைய குரூப் 4 தேர்வில் வெற்றி பெற்றனர். இதில் ஆர்.திருநாவுக்கரசு என்ற மாணவர் தட்டச்சர் பணியிடத்திற்கு மாநிலத்திலேயே முதலாவது மாணவராக தேர்ச்சி பெற்றார். கோவை மண்டல வேலைவாய்ப்பு அலுவலகங்களிலேயே, அதிகமான எண்ணிக்கையில் திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தான் 35 பேர் தேர்ச்சியடைந்து உள்ளனர். தேர்ச்சி பெற்றோரை மாவட்ட ஆட்சியர் கே.எஸ்.பழனிசாமி பாராட்டினார். மாவட்ட வருவாய் அலுவலர் ச.பிரசன்னா ராமசாமி, கோவை மண்டல இணை இயக்குநர் (வேலைவாய்ப்பு) ஆ.லதா, கோவை மண்டலத்தைச் சார்ந்த துணை இயக்குநர்கள் ஓ.எஸ்.ஞானசேகரன் மற்றும் ஆ.ஜோதிமணி, உதவி இயக்குநர்கள், ,திருப்பூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ராதிகா ஆகியோர் உடன் இருந்தனர்.

Leave A Reply

%d bloggers like this: