திருப்பூர்,
திருப்பூரில் பிஎஸ்என்எல் ஓய்வூதியர் சங்க கிளையின் சார்பில் கேரள வெள்ள நிவாரண நிதி ரூ.18 ஆயிரம் சேகரிக்கப்பட்டு கேரள முதலமைச்சர் பேரிடர் நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

திருப்பூர் பிஎஸ்என்எல் அலுவலக வளாகத்தில் வியாழனன்று இச்சங்ககூட்டம் கிளைத் தலைவர் பா.சௌந்தரபாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இதில் சங்க உறுப்பினர் ஐம்பது பேர் கலந்து கொண்டனர். இதில் கேரள வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண நிதி வழங்க கோரிக்கை விடப்பட்டது. இதன் அடிப்படையில் உறுப்பினர்கள் உடனடியாக தங்கள் பங்களிப்பை வழங்கினர். மொத்தம் ரூ. 18 ஆயிரத்தை கேரள முதல்வரின் பேரிடர் நிவாரண நிதி கணக்கிற்கு நேரடியாக அனுப்பி வைத்ததாக சங்க செயலாளர் முத்துசாமி தெரிவித்தார்.

Leave A Reply

%d bloggers like this: