சேலம்,
தலித் மக்களுக்கு பட்டா கேட்டு சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கட்சியினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சேலம் மாவட்டம், ஆத்தூர் தாலுகாவளையமாதேவி பகுதியில் 97 தலித் குடும்பத்தினர் வசித்து வரும் பகுதிக்கு அரசின் சார்பில் எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. மேலும், பல தலைமுறைகளாய் வாழ்ந்து இம்மக்களுக்கு இதுவரை வீட்டுமனை பட்டா வழங்கப்படாத நிலையில், பட்டா கோரி நீண்ட நாட்களாக போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இருப்பினும் அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காமல் காலம் தாழ்த்தி வருகின்றனர். இந்நிலையில், இம்மக்களுக்கு உடனடியாக வீட்டுமனைப்பட்டா வழங்க ஆட்சியர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி வியாழனன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் ஆத்தூர் தாலுகா செயலாளர் எ.முருகேசன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், மாவட்ட குழு உறுப்பினர்கள் பி.பாலகிருஷ்ணன், பி.ரமணி, ஆத்தூர் தாலுகா குழு உறுப்பினர் வி.சின்னசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: