திருவனந்தபுரம்:
பெரு வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து சபரிமலை அய்யப்பன் கோவிலில் பக்தர்களுக்கான அனுமதி காலவரையின்றி ரத்து செய்யப்பட்டுள்ளது. சீரமைப்பு பணிகள் முடிந்த பின்னரே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள் என்று தேவசம் போர்டு தெரிவித்துள்ளது.

இப்போது ஏற்பட்டுள்ள சேதத்தை அடுத்து கோவிலில் வழக்கமாக பூஜைகள் நடைபெறும் என்றும் தரிசனத்திற்காக பக்தர்களுக்கு அளிக்கப்படும் அனுமதி மட்டும் காலவரையின்றி ரத்து செய்யப்படுவதாகவும் தேவசம் போர்டு அறிவித்துள்ளது. இதனால் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜைக்காவது பக்தர்கள் தரிசிக்க அனுமதி கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Leave A Reply

%d bloggers like this: