தீக்கதிர்

கொலை முயற்சி: ஆர்எஸ்எஸ் மீது லாலு மகன் புகார்…!

பாட்னா;
ஆர்எஸ்எஸ் பரிவாரங்களும், பாஜக-வும் தன்னைக் கொல்வதற்கு சதித் திட்டம் தீட்டுவதாக, லாலு பிரசாத்தின் மூத்த மகன் தேஜ் பிரதாப் குற்றம் சாட்டியுள்ளார். பக்ரீத்
பண்டிகையை முன்னிட்டு இஸ்லாமிய மக்களைச் சந்திக்க மஹ்வா தொகுதிக்கு சென்றபோது, வழியில் ஆயுதமேந்திய நபரால், தாக்குதல் முயற் சிக்கு ஆளானதாகவும், ஆனால், போலீசார் நடவடிக்கை எதையும் எடுக்கவில்லை என்றும் பிரதாப் தெரிவித்துள்ளார்.