தில்லி,

கடந்தாண்டில் மட்டும் காப்பகத்தில் இருந்த குழந்தைகளில் 2 லட்சம் குழந்தைகள் காணமல் போயிருப்பதாக மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்திருக்கிறது. இதனை கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள் அதிர்ச்சியடைந்தனர்.

காப்பகங்களின் எண்ணிக்கை குறித்த வழக்கு ஒன்று உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் இருந்து வருகிறது. இந்த வழக்கில் இந்தியாவில் உள்ள குழந்தைகள் காப்பகங்கள் எத்தனை? அந்த காப்பகங்கள் எத்தனை குழந்தைகள்  இருக்கின்றனர் என்பது குறித்து அறிக்கையை தாக்கல் செய்யும்படி மத்திய அரசிடம் கேட்டிருந்தது. அதன்படி மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருக்கும் அறிக்கையில்  அதன்படி,  கடந்த 2016-17 ஆம் ஆண்டில் 4.73 லட்சம் குழந்தைகள் காப்பகங்களில் வசித்து வந்தனர்.    ஆனால் 2018 ஆம் வருடக் கணக்கின் படி மொத்தம் 2.61 லட்சம் குழந்தைகள் மட்டுமே காப்பகங்களில் வசித்து வருகின்றனர்.   மீதமுள்ள 2 லட்சம் குழந்தைகள் காணாமல் போய் இருக்கலாம் என பொறுப்பற்ற முறையில் மத்திய அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இதற்கு வழக்கை நடத்தி வரும் உச்சநீதிமன்ற அமர்வு அதிர்ச்சியை தெரிவித்துள்ளது.  அமர்வு, “இந்த தகவல் நீதிமன்றத்தை மிகவும் வேதனைப்படுத்துகிறது.   இது வெறும் எண்ணிக்கை அல்ல.  உயிருள்ள குழந்தைகள்.   இது மிகவும் கவனம் செலுத்த வேண்டிய விவகாரம் ஆகும்.

இந்த குழந்தைகள் உண்மையிலேயே காணாமல் போய் விட்டனரா? அல்லது காப்பகங்கள் அதிக உதவி பெற பொய்யான தகவல்களை போன வருடம் அளித்ததா?  அல்லது இந்த குழந்தைகள் தவறாக பயன் படுத்தப்பட்டுள்ளனரா? “ என சந்தேகத்தை எழுப்பி உள்ளது.  மேலும் இது குறித்து விசாரிக்க ஒரு குழு அமைக்க வேண்டும் என அரசுக்கு உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தது உத்தரவு பிறப்பித்திருக்கிறது.

Leave A Reply

%d bloggers like this: