சென்னை;
தமிழகத்தில் மூத்த ஐ.ஏ.எஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மதுரை மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார். கடலூர் மாவட்ட ஆட்சியராக இருக்கும் தண்டபாணி சென்னை மாவட்ட ஆட்சியராக மாற்றப்பட்டுள்ளார்.

திருவள்ளூர் ஆட்சியர் சுந்தரவல்லி வணிக வரித்துறை இணை ஆணையராக மாற்றப்பட்டுள்ளார். அரசு பாடத்திட்ட செயலாளர் உதயசந்திரன் தொல்லியல் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். கார்த்திகேயேகன் ஐ.ஏ.எஸ் கூடுதல் பொறுப்பாக தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் நிதி ஒதுக்கீடு துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். ஐ.ஏ.எஸ் அசோக் டாங்ரே குடிநீர் வடிகால் வாரியத்திற்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார். ஈரோடு மாவட்ட ஆட்சியர் கிருபாகரன் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்கு மாற்றப்பட்டுள்ளார்.

 

Leave A Reply

%d bloggers like this: