ஆடவர் இரட்டையர் பிரிவு அரையிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோஹன் போபண்ணா – சரண் டிவிஜ் ஜோடி,ஜப்பானின் யு சுகி-ஷிமபக்குரோ ஜோடியை எதிர்கொண்டது.
தொடக்கம் முதலே மிக பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் போபண்ணா- சரண் ஜோடி 4-6,6-3,10-8 என்ற செட் கணக்கில் போராடி வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு முன்னேறியது.தோல்வியடைந்த ஜப்பானின் யு சுகி-ஷிமபக்குரோ ஜோடிக்கு வெண்கலப் பதக்கம் வழங்கப்படவுள்ளது.

ரோஹன் போபண்ணா- சரண் டிவிஜ் ஜோடியால் ஆடவர் பிரிவில் இரட்டையர் பிரிவில் இந்தியாவிற்கு குறைந்தப்பட்சம் வெள்ளிப்பதக்கம் கிடைப்பது உறுதியாகிவிட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.