ஆடவர் ஹாக்கி
ஆசிய விளையாட்டு போட்டி ஹாக்கி தொடரில் குரூப் “ஏ” பிரிவில் இந்திய ஆடவர் ஹாக்கி அணி தனது இரண்டாவது லீக் ஆட்டத்தில் ஹாங்காங்கை எதிர்கொண்டது.

தொடக்கம் முதலே இந்திய அணி கோல் மழை பொழிந்த இந்திய அணி 26-0 என்ற கோல் கணக்கில் ஹாங்காங் அணியை ஈவிரக்கமில்லாமல் பிழிந்தெடுத்து.இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக ருபிந்தர் பால் சிங் 5 கோல்களும்,ஹர்மன் ப்ரீத் 4 கோல்களும்,ஆகாஷ் தீப் 3 கோல்களும்அடித்து வெற்றிக்கு உதவினர்.

இந்திய அணி தனது மூன்றாவது லீக் ஆட்டத்தில் ஜப்பானை வெள்ளியன்று எதிர்கொள்கிறது.
86 வருட சாதனையை முறியடித்த இந்திய ஹாக்கி அணி.1932 ஒலிம்பிக் தொடரில் இந்திய அணி,அமெரிக்காவை 24-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிக கோல் வித்தியாசத்தில் வெற்றி பெற்று புதிய சாதனை படைத்தது.அதன் பின் 2018 ஆசிய போட்டி ஹாக்கி தொடரில் ஹாங்காங் அணியை 26-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியதன் மூலம் 86 வருட சாதனையை தானே தகர்த்துக்கொண்டது இந்திய அணி.

Leave a Reply

You must be logged in to post a comment.