மும்பை:
மும்பை அடுக்கு மாடி கட்டிடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை பரேல் பகுதியின் ஹிண்ட்மாட்டா சினிமாவுக்கு அருகே உள்ள பிரபலமான  கிரிஸ்டல் டவர் அடுக்குமாடி குடியிருப்பின் 12 வது தளத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டது. இதுபற்றி தகவல் அறிந்த தீயணைப்பு படை வீரர்கள், சம்பவ இடத்திறகு விரைந்தனர்.

தீயணைப்பு படையினர் சென்ற சிறிது நேரத்தில் தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியான புகையின் அளவு படிப்படியாக அதிகரித்து 4-ம் நிலையை எட்டியது. தீப்பிழம்புகள் வெளியே தெரிய ஆரம்பித்தன. இதனையடுத்து அந்த தளத்தில் இருந்தவர்களை மீட்புக்குழுவினர் ராட்சத கிரேன் மூலம் மீட்கப்பட்டனர். பின்னர் தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அணைத்தனர்.  இந்த விபத்தில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் மூச்சுத்திணறல் மற்றும் தீயில் கருகிய நிலையில் மீட்கப்பட்ட சுமார் 16 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதையடுத்து தீ விபத்துக்கான காரணம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: