கொல்கத்தா;
வெள்ளத்தால் பெரும் துயரத்தை சந்தித்து வரும் கேரளத்தை மீட்கும் பணிக்கு தலைமை வகித்த முதல்வர் பினராயி விஜயனுக்கு கொல்கத்தாவிலிருந்து வெளியாகும் தி டெலிகிராப் ஆங்கில நாளேடு “முதல்வர் என்கிற நெருக்கடி கால மேலாளர்” என முதன்மைச் செய்தியாக தலைப்பிட்டு பாராட்டு தெரிவித்துள்ளது.“அணைகளின் மதகுகள் (ஷட்டர்கள்) ஒவ்வொன்றாக திறந்து கொண்டிருக்கும் போதும், மாவட்டம் ஒவ்வொன்றாக வெள்ளத்தில் மூழ்கிக் கொண்டிருந்த போதும் மலையாளிகள் உற்று நோக்கியது ஒரு முகத்தைத் தான். அவர்கள் காதுகொடுத்தது ஒரு குரலை கேட்பதற்காகத்தான். கேரளத்து மக்கள் மிக அதிகமாக நம்பிக்கை வைத்திருந்த அந்த மனிதர் முதலமைச்சர் நாற்காலியில் அமர்ந்துள்ள பினராயி விஜயனல்லாமல் வேறு யாருமல்ல.

வெள்ளம் வாசல்களுக்கு எட்டும்போது முதல்வரின் இருக்கையை புகலிடமாக்கும் அத்தகையதொரு காட்சி நாட்டில் வேறெங்குமில்லை” என டெலிகிராப் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.கேரளத்தின் உயிர்த்துடிப்பு தேசிய அளவில் செய்தியாவதன் ஊடாக முதல்வர் பினராயி விஜயனின் தலைமையை புகழ்ந்த தேசிய நாளிதழ் தி டெலிகிராப் இந்த பாராட்டை பிரகடனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

You must be logged in to post a comment.