திருவனந்தபுரம்:
“தமிழர்களின் அன்பை மறக்க மாட்டோம்.. இனி தமிழகத்துக்கு ஒரு பிரச்சனை வந்தால், நாங்கள் முதலில் நிற்போம்” என்று கேரள இளைஞர் ஒருவர் பேசிய வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

வெள்ளத்தில் மிதக்கும் கேரளத்திற்கு, தமிழக மக்கள் மிகப்பெரிய ஆறுதலாக மாறியிருக்கிறார்கள். பலநூறு கோடி ரூபாய் மதிப்பிலான நிவாரணப் பொருட்களையும் நிதியுதவியையும் அள்ளிக்கொடுத்து, கேரள மக்களை நெகிழ வைத்துள்ளனர். பதிலுக்கு கேரள மக்கள் தங்களின் நன்றியறிதலை அன்புடன் வெளிப்படுத்தி வருகின்றனர்.
அந்த வகையில், பாலக்காடு மாவட்டத்தைச் சேர்ந்த ஸ்ரீஜித் என்ற இளைஞர் மிகுந்த நெகிழ்ச்சியுடன் தனது நன்றியை, சமூகவலைத்தளம் மூலம் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழ் ஆளுங்க என்றாலே முன்பு இங்கு ஒரு மாதிரி பாப்பாங்க; அவர்களுக்கு, கல்வித்திறன் குறைவு என பலர் தப்பா நினைப்பாங்க” என்று ஆரம்பித்துள்ள ஸ்ரீஜித், “ஆனா டூ வீலர்ல இருந்து, லாரி வரை டன் கணக்குல எங்களுக்குத் தேவையான பொருள்களை நீங்கதான் கொடுத்துட்டு இருக்கீங்க;ஜல்லிக்கட்டு விஷயத்துல, உங்களோட பவர் காமிச்சீங்க; இப்ப கேரள வெள்ள நேரத்துல, உங்க மனசோட அன்ப காமிச்சுருக்கீங்க…” என்று மனம் நெகிழ்ந்துள்ளார்.
தொடர்ந்து, “இப்பவும் லோடு லோடாக எல்லா மாவட்டத்துல இருந்தும் நிவாரணம் வந்துட்டு இருக்கு; இப்ப நிலைமை கொஞ்சம் நார்மல் ஆகி, எல்லோரும் வீட்டுக்குப் போக ஆரம்பிச்சுட்டாங்க; இந்த உதவிய நாங்க எப்பவும் மறக்க மாட்டோம்” என்று கூறியிருக்கும் ஸ்ரீஜித், “ரெண்டு நாள் கேம்ப்ல இருந்த எனக்கே இப்படின்னா, பல நாள்களாக இருப்பவங்க உங்க அன்ப நல்லாவே பார்த்துருப்பாங்க; தமிழ்நாட்ல இனி எந்தப் பிரச்னை வந்தாலும் நாங்க அங்கு வந்து நிப்போம். உங்களுக்காக பிரார்த்தனை பண்ணிக்கிறோம்” முடித்துள்ளார்.
ஸ்ரீஜித்தின் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Leave a Reply

You must be logged in to post a comment.