சென்னை:
இஸ்லாமியர்களின் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு புதனன்று தமிழ கத்தில் சிறப்புத் தொழுகைகள் நடை பெற்றன. நாடு முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்கள் பக்ரீத் திரு நாளை கொண்டாடினர். தில்லி ஜூம்மா மசூதி, மும்பை மாஹிம் உட்பட வடமாநிலங்களின் பல்வேறு இடங்களிலும் பக்ரீத்தை முன்னிட்டு சிறப்புத் தொழுகைகள் நடைபெற்றன.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங் களில் உள்ள பள்ளி வாசல்களில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு  நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.சென்னை பிராட்வே டான் பாஸ்கோ பள்ளியில் நடை பெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்கள், சிறுவர்கள் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
தொழுகைக்குப் பிறகு, கேரள வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு வழங்குவதற்காக நிதியும் சேகரிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.