தீக்கதிர்

தமிழக மீனவர்கள் 8 பேர் கைது..!

தூத்துக்குடி;
மீன்பிடிக்கச் சென்ற தூத்துக்குடி மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம், திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் அந்தோணி (35), ரூபிஸ்டன், வில்பிரட் (55), விஜய் (29), ஆரோக்கியம் (35) வினோத் (35), ரமேஷ் உள்ளிட்ட
8 பேர் கடந்த 18 ஆம் தேதியன்று கடலுக்கு மீன்பிடிக்க சென்றனர். அதன் பின்னர் அவர்கள் திரும்பி வரவில்லை.இதுகுறித்து விசாரணை நடைபெற்றது.அப்போது இலங்கை கடல் எல்லை பகுதியில் அவர்கள் மீன்பிடித்ததாகக் கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து அழைத்துச் சென்றது

தெரியவந்தது. அவர்களிடம் கடற்படையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இதுபற்றி அவர்களது உறவினர்கள் மாவட்ட நிர்வாகத்தி ற்கு தகவல் தெரிவித்தனர். சிறைப்பிடிக்கப்பட்ட மீனவர்களை  உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.