விருதுநகர்;
கேரள மாநிலத்தில் வரலாறு காணாத வெள்ளத்தால் ஏராளமானோர் பலியாகினர். பல லட்சம் பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ள னர். பலர், தங்களது வீடுகளையும், உடைமைகளையும் இழந்து தவிக் கின்றனர். இந்நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் விருதுநகர் மாவட்டத் தைச் சேர்ந்த தோழர்கள் வீதி, வீதி யாய் நிவாரணப் பொருட்களை சேகரித்தனர். அதில், உணவுப் பொருட்கள், புதிய ஆடைகள் மற்றும் மருந்துப் பொருட் களும் அடங்கும். அதன் மொத்த மதிப்பு ரூ. 4லட்சம் ஆகும். நிவாரணப் பொருட்கள் அனைத் தும் தனி லாரியில் ஏற்றப்பட்டு, விருதுநகரில் உள்ள எம்.ஆர்.வி. நினைவகத்தி
லிருந்து திருவனந்தபுரத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

அந்த வாகனத்தை கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.பாலசுப்பிர மணியன் கொடியசைத்து அனுப்பி வைத்தார்.இந்நிகழ்ச்சியில் மாவட்ட செய லாளர் கே.அர்ஜூனன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் சி.முரு கேசன், எம்.முத்துக்குமார், வி.முருகன், எல்.முருகன், மாவட்டக்குழு உறுப் பினர் ஜி.பெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.

Leave A Reply

%d bloggers like this: