விருதுநகர் மாவட்டத்தில் கேரள வெள்ள நிவாரண நிதி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மாவட்டம் முழுவதும் திரட்டப்பட்டது. சிவகாசியில் காப்பீட்டு ஊழியர் சங்க மூத்த தலைவரும், சமூக ஆர்வலருமான ஏ.ராஜேந்திரன், ரூ.27 ஆயிரம் நிதியை கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.என்.தேவாவிடம் வழங்கினார். உடன் சிஐடியு மூத்த தலைவர் ஜே.லாசர், சிபிஎம் நகரச் செயலாளர் கே.முருகன் உள்ளிட்டோர். சிவகாசி பட்டாசுக் கடை உரிமையாளர் முத்துக்கிருஷ்ணன், கேரள வெள்ள நிவாரண நிதியாக ரூ. 5 ஆயிரத்தை மார்க்சிஸ்ட் கட்சி தலைவர்களிடம் வழங்கினார்.

Leave A Reply

%d bloggers like this: