கோவில்பட்டி;
மனம் வருந்திய சிறுமி உண்டியலில் தான் சேமித்த பணத்தில் பிஸ்கட், ரஸ்க்
வாங்கித் தந்து நெகிழ வைத்தார்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு உதவிகேட்டு சிபிஎம் கோவில்பட்டி நகர ஒன்றிய குழுக்கள் சார்பில் புதுரோட்டில் வசூல் செய்தனர்.

அப்போது முத்தையாமால் தெரு வைச் சேர்ந்த எஸ்.என். சட்டமுத்து, முருகேஸ்வரி தம்பதியரின் இளைய மகள் மீனகாஷினி, தான் உண்டியலில் சேமித்த பணம் ரூ.1500க்கு பிஸ்கட், ரஸ்க் வாங்கி இரண்டு பெட்டிகளை தலைவர்களிடம் வழங்கினார்.
அவரது தந்தை கூறியது அனைவரையும் நெகிழ வைத்தது, ‘6 மாதத்தில் குறை பிரசவத்தில் பிறந்த குழந்தை. கால்கள் நடக்க முடியாமல் இருந்தது. தொடர் சிகிச்சையால் தற்போது யாருடைய துணையும் இல்லாமல் நடக்கிறார்.

செயின்பால்ஸ் மெட்ரிக் பள்ளியில் 4 ஆம் வகுப்பு படிக்கிறார். நல்ல திறமையானவள், அவள் கேரள மக்கள் படும் துயரினைக் கண்டு தானும் ஏதாவது செய்யவேண்டும் என என்னிடம் கூறி தனது உண்டியல் பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க வைத்தாள்’ எனக் கூறினார்.

Leave A Reply

%d bloggers like this: