லக்னோ:
இஸ்லாமியர்களால் தியாகத் திருநாளாகக் கொண்டாடப்படும் ‘பக்ரீத்’ பண்டிகையொட்டி ஆடுகள், மாடுகள் பலியிடப்படுவது வழக்கம்.

ஆனால், உத்தரப்பிரதேச பாஜக அரசு மட்டும், பக்ரீத் பண்டிகையன்று ஆடுகளுடன் செல்பி எடுக்கக் கூட ஒரு தடை விதித்து உத்தரவு போட்டுள்ளது.இதுதொடர்பாக உத்தரப்பிரதேச முதல்வர் ஆதித்யநாத், மாவட்ட ஆட்சியர்களை காணொலி காட்சி மூலம் தொடர்பு கொண்டு வாய்மொழி உத்தரவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.அதில், “பக்ரீத் பண்டிகையையொட்டி ஆடுகள், மாடுகளை பொது இடங்களில் பலியிடுவதை அனுமதிக்கக் கூடாது; பலியிடும் முன்பு ஆடுகள், மாடுகளுடன் செல்பி எடுத்து சமூகவலைதளங்களில் வெளியிடும் போக்கு சில ஆண்டுளாக உள்ளது; இதற்கும் அனுமதி அளிக்கக் கூடாது” என்று கூறியுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: