பாட்னா;
உடல் நலக்குறைவு காரணமாக பீகார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் மீண்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

ராஷ்ட்ரிய ஜனதாதளம் கட்சியின் தலைவரும் பீகார் முன்னாள் முதல்வருமான லாலு பிரசாத் யாதவ், கால்நடைத் தீவன ஊழல் தொடர்புடைய 4 வழக்குகளில் குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, கடந்த டிசம்பர் 23-ஆம் தேதி சிறையில் அடைக்கப்பட்டார்.கடந்த மே மாதம் அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம் ஜூன் 29-ஆம் தேதி ஜாமீன் வழங்கியது. பின்னர் பல்வேறு கட்டங்களில் இந்த ஜாமீன் நீட்டிக்கப்பட்டு, தற்போது ஆகஸ்ட் 27 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் லாலு உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மகன் தேஜஸ்வி யாதவ் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

அதில், “ தனது தந்தை பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு ‘மும்பை ஆசியன் ஹார்ட் இன்ஸ்டிட்யூட்’ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருடைய உடல் நிலையை மருத்துவ குழுவினர் தீவிரமாகக் கண்காணித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவர் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்” என்று தேஜஸ்வி குறிப்பிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: