ஷாம்லி;
பாஜக ஆளும் மாநிலங்களில் ‘பசு பாதுகாப்பு’ என்ற பெயரில் அப்பாவிகள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் நின்றபாடாக இல்லை. உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் கூட மத்திய பாஜக அரசு இப்பிரச்சனையில் தனது மாநிலங்களை கண்டிப்பதாக இல்லை. இதனால் பசு குண்டர்கள் வெறியாட்டம் தொடர்ந்து வருகிறது.

அந்த வகையில், உத்தரப்பிரதேச மாநிலம் ஷாம்லியில், ‘கவ் ரக்ஷா சேவா தள்’ அமைப்பைச் சேர்ந்தவர்கள், திங்களன்று 2 இளைஞர்களை ‘பெல்ட்டுகள் மற்றும் உருட்டுக் கட்டைகளால் சரமாரியாக தாக்கியுள்ளனர். இளைஞர்கள் 2 பேரும் பசுக்களைக் கடத்த வந்தவர்கள் என்று முடிவுகட்டி இந்த தாக்குதலை அரங்கேற்றியுள்ளனர்.

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், படுகாயம் அடைந்த 2 இளைஞர்களை மீட்டுள்ளனர். ஆனால், அப்போதும் கூட பசு குண்டர்கள் தொடர்ந்து தாக்குதலை நடத்தியுள்ளனர். இதையடுத்து போலீசார் தற்போது பசு குண்டர்கள் 2 பேரைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave A Reply

%d bloggers like this: