சென்னை,
பதிலிகளாக பணிசெய்யும் (சப்ஸ்டியூட்டுகளை) பணி நிரந்தரம் செய்யலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய உயர்நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தி ரயில்வே மற்றும் ஐசிஎப் தொழிலாளர்கள் செவ்வாயன்று (ஆக21) உண்ணாநிலை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து பினாமிகள் தொடுத்த உச்சநீதிமன்ற வழக்கிலிருந்து ஐசிஎப்ன் 308 பதிலி தொழிலாளர்களை விடுவித்து நிரந்தரம் செய்ய நிர்வாகம் மூத்த வழக்கறிஞரை நியமித்து வழக்கை முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், நீதிமன்ற தீர்ப்பு வரும் வரை விதியை தளர்த்தி இடமாற்றம் செய்ய வழிவகுக்கவேண்டும், ஜெய்பூரில் 2005 முதல் 2006 முதல் சப்ஸ்டியூட்டுகளாக பணிபுரிந்து வேலை நீக்கம் செய்யப்பட்ட ரயில்வேயில் பயிற்சி முடித்த 330 ஆக்ட் அப்ரண்டீஸ்களுக்கு ஆதரவாக மேல்முறையீடு செய்து வேலை வழங்க வேண்டும், தேசிய ஓய்வூதியர் திட்டத்தின் கீழ் சப்ஸ்டியூட்டுகளுக்கும் என்பிஎஸ் பிடித்தம் செய்யவேண்டும் உள்ளிட்ட பல கோரிக்கைகள் வலியுறுத்தி டி.ஆர்.இ.யூ மற்றும் ஐசிஎப் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் இந்த உண்ணா நிலைப்போராட்டம் நடைபெற்றது.போராட்டத்திற்கு டிஆர்இயூ உதவித்தலைவர் ஏ.ஜானகிராமன் தலைமை தாங்கினார். உதவி தலைவர் ஆர்.இளங்கோ போராட்டத்தை துவக்கி வைத்தார். இணைப்பொதுச்செயலா ளர்கள் ஆர்.ஜி.பிள்ளை, ஏ.வெங்கட்ராமன், உதவிபொதுச்செயலாளர் சி.முருகேசன், பேபி சகீலா, உதவிப்பொதுச்செயலாளர் ஏ.சீனிவாசலு, ஒர்க்ஷாப் உதவிச் செயலாளர் பால்ஜிஜோனி, சேலம் டிவிசன் பொருளாளர் எம்.முருகேசன் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

Leave a Reply

You must be logged in to post a comment.