தீக்கதிர்

தரமற்ற சாலை: கிராம மக்கள் சாலை மறியல்

தருமபுரி,
தரமற்ற சாலை அமைப்பதைக் கண்டித்து மாதே அள்ளி ஊராட்சி மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

தருமபுரி மாவட்டம் பென்னகரம் வட்டத்துக் குட்பட்டது மாதே அள்ளி கிராமம். பாப்பாரப்பட்டியிலிருந்து மாதே அள்ளி வரை உள்ள தார்ச் சாலை குண்டும் குழியுமாக மாறியதால் வாகனங்கள் செல்வோர் சிரமப்பட்டு வந்தனர். இச்சாலையை மேம்படுத்த வேண்டும் என அம்மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.  இந்நிலையில், மாதே அள்ளி கிராம சாலையை சீரமைக்க ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சிதுறை தாய் திட்டம் சார்பில் ரூ. 21 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டுப் பணி நடைபெற்று வந்தது. தரமற்ற முறையில் சாலை அமைப்பதாகக் கூறி மாதே அள்ளி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.