நாமக்கல்;
தந்தையின் விபரீத செல்பி மோகத்தால் நாமக்கல் மாவட்டம் வாங்கல் காவிரிப் பாலத்தில் இருந்து 4 வயது சிறுவன் ஆற்றில் விழுந்தான். மேட்டூர் அணையிலிருந்து 2 லட்சம் கனஅடி வரை தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இதனால் காவிரி ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

இந்நிலையில் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் வாங்கல் பாலத்தின் நடுப்பகுதியில் இருந்து ஒரு பெற்றோர் காவிரியாற்றில் செல்பி எடுத்தனர். அப்போது அவர்களது 4 வயது ஆண் குழந்தையை பாலத்தின் தூண் ஒன்றில் சாய்த்து அமர வைத்து ஒரு கையால் பிடித்தபடி, தந்தை செல்பி எடுக்க முயன்றார். அப்போது எதிர்பாராதவிதமாக அச்சிறுவன் ஆற்றில் தவறி விழுந்தான்.தகவல் அறிந்து வந்த தீயணைப்புத்துறையினர் சிறுவனை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

Leave a Reply

You must be logged in to post a comment.