புதுதில்லி;
மத்திய பிரதேச மாநிலத்தின் மண்ட்சௌர் மாவட்டத்தில் 7 வயது சிறுமி
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் 2 பேருக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூன் 26-ஆம் தேதி பள்ளியில் இருந்து கடத்தப்பட்ட அச்சிறுமி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு, கழுத்துப் பகுதி வெட்டப்பட்ட நிலையில் மீட்கப்பட்டார். மேலும் அவரது தலை மற்றும் பிறப்புறுப்புகளில் கடுமையாக தாக்கப்பட்டிருந்ததும் மருத்துவ சிகிச்சையில் தெரியவந்தது.

இதில்குற்றவாளிகள் இர்ஃபான் மற்றும் ஆசிஃப் ஆகியோரை குற்றம் நடைபெற்ற 24 மணிநேரங்களில் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது இந்த கோரச் சம்பவம் தொடர்பாக 500 பக்கங்கள் அடங்கிய குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. 2 மாதங்களுக்குள்ளாக இவ்வழக்கை விசாரித்து முடித்த சிறப்பு நீதிமன்றம், இர்ஃபான் மற்றும் ஆசிஃப் ஆகிய இரு வருக்கும் தூக்கு தண்டனை விதித்து செவ்வாய்கிழமையன்று உத்தரவிட்டது.

Leave A Reply

%d bloggers like this: