லக்னோ;
பாகிஸ்தான் ராணுவத் தளபதியை கட்டியணைத்தற்காக, முன்னாள் கிரிக்கெட் வீரரும், பஞ்சாப் மாநில அமைச்சருமான நவ்ஜோத் சிங் சித்து-வின் தலைக்கு, மதவெறி அமைப்பு ஒன்று ரூ. 5 லட்சம் விலை அறிவித்துள்ளது.

புகழ்பெற்ற கிரிக்கெட் வீரரான இம்ரான்கான், பாகிஸ்தான் பிரதமராக தேர்வாகியுள்ளார். இவர் தனது பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ளுமாறு, முன்னாள் இந்திய கிரிக்கெட் நட்சத்திரங்களான கவாஸ்கர், கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அழைப்பு விடுத்திருந்தார். இவர்களில் கவாஸ்கர், கபில்தேவ் ஆகியோர் பாகிஸ்தான் செல்லாத நிலையில், சித்து மட்டும் இம்ரான்கான் பதவியேற்பில் கலந்துகொண்டார்.மேலும் விழாவின் போது, தன்னை வரவேற்ற பாகிஸ்தான் ராணுவ தளபதியை, நல்லெண்ண அடிப்படையில் சித்து கட்டியணைத்தார்.தேசத்துரோக வழக்கு
வழக்கம்போல, இதனை தங்களின் மதவெறி அரசியலுக்கு கிடைத்த தீனியாக பயன்படுத்திக் கொண்ட பாஜக-வினர், சித்துவுக்கு எதிராக அவரது கொடும்பாவியை எரித்துப் போராட்டம் நடத்தி வருகின்றனர். பீகார் மாநிலத்தில் சித்து மீது ஐ.பி.சி. 124ஹ, 153க்ஷ மற்றும் 504 ஆகிய பிரிவுகளின் கீழ், தேசத்துரோக வழக்கும் போட வைத்துள்ளனர்.

இந்நிலையில் இம்ரான் கான் பதவியேற்பில் பங்கேற்ற சித்து-வின் தலையை கொண்டு வருபவருக்கு ரூ. 5 லட்சம் பரிசுத் தொகை வழங்கப்படும் என்று, உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள ராஷ்ட்ரிய பஜ்ரங் தளம் கட்சியின் ஆக்ரா பிரிவுத் தலைவர் சஞ்சய் ஜாட் கூச்சலிட்டுள்ளார்.

Leave A Reply

%d bloggers like this: