கேரள வெள்ள நிவாரண நிதியாக
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு சார்பில் முதற்கட்டமாக ரூ 20 லட்சம் அளிக்கப்பட்டிருக்கிறது.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச்செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழகத்தில் உள்ள கட்சி மற்றும் வர்க்க, வெகுஜன அமைப்புகள் கேரள வெள்ள நிவாரண பொருட்கள் மற்றும் நிதிகளை சேகரித்து கேரளாவிற்கு அனுப்பி வருகின்றனர். குறிப்பாக உணவு பொருட்கள், மருந்தகள், பாத்திரங்கள் உள்ளிட்ட பல்வேறு அத்தியாவசதிய பொருட்களை அனுப்பி வருகின்றனர்.
அதே நேரம் கட்சியின் மாநில மையத்திற்கு கட்சி உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்கள் நிவாரண நிதியை அனுப்பி வருகின்றனர். அதில் முதல் தவணையாக கட்சியின் மாநிலக்குழு சார்பாக ரூ 20 லட்சம் ரூபாயை கேரள முதல்வரின் வெள்ள நிவாரண நிதிக்கு அனுப்பி வைக்கப்பட்டிருக்கிறது என்று கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

Leave a Reply

You must be logged in to post a comment.