திருப்பூர்,
திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கேரளா வெள்ள நிவாரணத்திற்கு ரூ. 25 லட்சம் மதிப்பிலான பொருட்களை செவ்வாயன்று அனுப்பி வைக்கப் பட்டது.

கேரளா மாநிலத்தில் பெய்த கன மழை காரணமாக ஏராளமானோர் வீடுகள் மற்றும் உடைகள்,உடமைகளை இழந்தனர். மேலும் 300க்கும் மேற்பட்டோர் இறந்துள்ளனர். இந்நிலையில் கேரள அரசு வீடுகளை இழந்த மக்களுக்கு ரூ. 10 லட்சமும், உயிரிழந்த மக்களுக்கு ரூ.4 லட்சம் என அறிவித்துள்ளது. இதில் மத்திய அரசின் சார்பில் ரூ.500 கோடி மட்டும் தரப்படும் என அறிவித்தனர். இந்நிலையில் இந்தியாவில் பல மாநிலங்களிலிருந்து நிவாரண உதவிகள் செய்கின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் பொதுமக்களிடம் மூலம் வசூல் செய்து சுமார் 25 டன் மதிப்புள்ள நிவாராண பொருட்களான அரிசி,பருப்பு வகைகள், மற்றும் உடைகள், பால்பவுடர்கள்,பெட்சீட்கள், சானிட்டரி நாப்கின்கள் ஆகியவைகள் அனுப்பப்பட்டது.இதில் மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எஸ்.முத்துக்கண்ணன், பாலாஜி ரோடுலைன்ஸ் உரிமையாளர் அரிமா மு.ஜீவானந்தம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.ரங்கராஜ், எம்.ராஜகோபால், வேலம்பாளையம் நகர செயலாளர் வி.பி.சுப்பிரமணியம் உள்ளிட்ட ஏரளாமானோர் கலந்து கொண்டனர்.

Leave A Reply

%d bloggers like this: