சேலம்,
கேரளாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிடும் வகையில் சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மார்க்சிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் உள்ளிட்ட அமைப்புகளின் சார்பில் வெள்ள நிவாரண நிதி மற்றும் பொருட்கள் சேகரிப்பு இயக்கம் நடைபெற்றது.

மார்க்சிஸ்ட் கட்சியின் ஆத்தூர் தாலுகா கமிட்டி சார்பில் ரூ.20 ஆயிரம் நிதியும், 23 சிப்பம் அரிசி, ரூ.14 ஆயிரம் மதிப்புள்ள நிவாரண பொருட்களும் சேகரிக்கப்பட்டது. இந்த இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் பி.ராமமூர்த்தி, மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம்.குணசேகரன், தாலுகா செயலாளர் ஏ.முருகேசன், உள்ளிட்ட தாலுகா குழு உறுப்பினர்கள் பங்கேற்றனர். மேச்சேரி இடைக்கமிட்டி சார்பில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ராமமூர்த்தி, தாலுகா செயலாளர் ஜி.மணிமுத்து தலைமையில் ரூ.8,860 சேகரிக்கப்பட்டது. இதேபோல், வாழப்பாடி தாலுகா அயோத்தியாப்பட்டனம், சேலம் வடக்கு, சேலம் தாலுகா, ஏற்காடு, நங்வள்ளி, கல்வராயன்மலை, உள்ளிட்ட இடைக்கமிட்டிகள் சார்பில் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டது.

சிறுவன் தாராளம்
சேலம் மாநகரம் அரியாக்கவுண்டம் பட்டி பகுதியில் தீக்கதிர் நாளிதழை தினமும் சைக்கிளில் கொண்டு சென்று விநியோகிக்கும் ஜெ.லட்சுமணன் என்ற சிறுவன், தனது ஒரு மாத விநியோக சம்பளமான ரூ.1,300ஐ வெள்ள நிவாரண நிதியாக கட்சியின் மாவட்டக் குழு உறுப்பினர் பி.பாலகிருஷ்ணனிடம் வழங்கினார். சேலம் மாநகரம் அன்னதானப்பட்டி பகுதியில் செயல்படும் சமூக நலமக்கள் இயக்கம் சார்பில் கேரள வெள்ள நிவாரண பொருட்கள் சேகரிப்பில் அரிசி, ஆடைகள்,உணவுப் பொருட்கள்குடிநீர் உள்ளிட்ட ரூ.50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை ரெட்கிராஸ்சொசைட்டியிடம் வழங்கினர். இதில் அமைப்பின் நிர்வாகிகள் பழனி, புஷ்பா பாண்டியன், நாகராஜன், செல்வராஜ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். ஹோலிகிராஸ் பள்ளி சார்பில் சுமார் ரூ.15 லட்சம் மதிப்பில் வழங்கப்
பட்டது. இந்த பொருட்கள் அடங்கியவாகனத்தை மாநகராட்சி ஆணையர்சதீஸ் கொடியசைத்து அனுப்பி வைத்தார். சேலம் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் கோவை சிஎஸ்ஐ திருமண்டலம் சேலம்வட்டம் சார்பில் 3.50லட்சம் மதிப்பிலான வெள்ள நிவாரண பொருட்களை தலைவர் சாந்தி பிரேம் குமார் தலைமையில் அனுப்பிவைக்கப்பட்டது. இதில் சிஎஸ்ஐ பாலிடெக்னிக் தாளாளர் இராபட் கிரிஸ்டோபர், முதல்வர் கீதா கென்னடி, கோட்டை குட்செப்படு பள்ளி தாளாளர் மதிவாணன் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

நாமக்கல்
மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் நாமக்கல் பேருந்து நிலையத்தில் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் கே.தங்கவேல் தலைமையில் கட்சியின் மாவட்டச் செயலாளர் கே.கந்தசாமி, நாமக்கல் ஒன்றியக் குழு செயலாளர் ஜெயமணி, நகர கிளை செயலாளர் கருப்பன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.பெருமாள், என்.வேலுசாமி மற்றும் மாவட்டக் குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் வெள்ள நிவாரண நிதி சேகரிப்பில் ஈடுபட்டனர். கண்ணம்பாளையத்தில் பேருந்து நிலையத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் வேலுசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் மணிமாறன் தலைமையிலும், வெப்படை பகுதியில் ஒன்றியச் செயலாளர் எம்.ஆர்.முருகேசன் தலைமையிலும் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஏ.ரங்கசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். எலச்சிபாளையம் பேருந்து நிலையத்தில் கட்சியின் ஒன்றியச் செயலாளர் சுரேஷ் தலைமையில் பொதுமக்களிடம் வெள்ள நிவாரண நிதி வசூல் செய்யப்பட்டது. பரமத்திவேலூர் பேருந்து நிலையத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே. தங்கமணி, மாவட்ட குழு உறுப்பினர் ஏ.கே. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற நிவாரண பொருட்கள் சேகரிப்பில் அரிசி, பருப்பு போன்ற ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேகரிக்கப்பட்டது.

Leave a Reply

You must be logged in to post a comment.