ஊத்துக்குளி,
ஊத்துக்குளி அருகே அணைப்பாளையத்திலுள்ள குட்டையை தூர்வாரியதில் முறைகேடு நடந்துள்ளதா என விசாரணை நடத்த விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

திருப்பூர் மாவட்டம், ஊத்துக்குளி ஊராட்சியிலுள்ள அணைப்பாளையம் கிராமத்தை ஒட்டி நொய்யல் ஆறு செல்கிறது. இந்த அணைப்பாளையம் குட்டை நொய்யல் ஆற்றின் அருகே அமைந்துள்ளது. இதனால் நொய்யல் ஆற்றில் அதிகப்படியான தண்ணீர் வரும்போது அணைப்பாளையத்தில் உள்ள தடுப்பணையில் நீரை சேமித்து, வாய்க்கால் வழியாக குட்டையில் சேமிக்கப்பட்டு, விவசாயத்திற்கு பயன்படுத்தி வந்தனர். ஆனால் தற்போது நொய்யல் ஆற்றில் சாயப்பட்டறைக் கழிவுநீர் கலந்து வருகிறது. இதனால் மாசுப்பட்ட நீரை தடுப்பணைகளில் சேமிக்கப்படுவதில்லை. இந்நிலையில் அணைப்பாளையத்திலுள்ள குட்டையை மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ. 4.97 லட்சம் செலவில் கடந்த ஆண்டு ஜுலை 20 முதல் தூர்வாரப் படுவதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வருடம் கடந்த நிலையில் குட்டை தூர்வாரபடமால் உள்ளது. மேலும், குட்டை முழுவதும் சீமைக்கருவேலமரங்கள் முளைத்துள்ளது. ஆனால், தூர்வாரப்பட்டதாக அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. எனவே, குட்டையை தூர்வார வேண்டும். குட்டையை தூர்வாரப்பட்டதாக அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளதால், முறைகேடுகள் நடந்துள்ளாத என மாவட்ட நிர்வாகம் விசாரணை செய்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave A Reply

%d bloggers like this: